< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
|6 Feb 2024 12:42 PM IST
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், 'நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்' என்றார்.