மும்பையில் பிரம்மாண்ட கலையரங்கம்... அம்பானிக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
|பிரம்மாண்ட கலையரங்கத்தை உருவாக்கியதற்கு அம்பானிக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் 'நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' என்ற பெயரில் பிரம்மாண்ட கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் சர்வதேச தரத்துடன் இசை, நாடகங்க நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கலாச்சார மைய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட கலையரங்கத்தை உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக நீட்டா அம்பானிக்கும், உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.
இந்த கலையரங்கத்தில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்."
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.