< Back
சினிமா செய்திகள்
பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த பேரனை அழைத்துச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்

பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த பேரனை அழைத்துச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
26 July 2024 1:10 PM IST

பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த தனது பேரனை நடிகர் ரஜினிகாந்த் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை,

'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியாகி வைரலானது. தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக 'கூலி' உருவாகி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த தனது பேரனை நடிகர் ரஜினிகாந்த் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பள்ளியில் நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்த பேரனின் சக வகுப்பு மாணவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோயினர்.

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, "என் மகன் இன்று காலை பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. அவனை சூப்பர் ஹீரோ தாத்தா பள்ளிக்கு அழைத்துச் சென்றார். திரையிலும், நிஜத்திலும் நீங்கள் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் சிறந்தவர் என் அன்பு அப்பா" என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்