< Back
சினிமா செய்திகள்
Modi Inauguration ceremony Rajinikanth invited
சினிமா செய்திகள்

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு

தினத்தந்தி
|
7 Jun 2024 8:24 PM IST

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வரும் 12-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்