< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!
|1 Jan 2024 10:39 AM IST
மக்கள் இனிப்பு, கேக்குகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சென்னை,
ஆங்கில புத்தாண்டான 2024-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடந்தது. மக்கள் இனிப்பு, கேக்குகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். வாழைமரம், தோரணங்களால் நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.