அம்பானி இல்ல திருமண விழா கோலாகலம்: ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பு
|அம்பானியின் திருமண நிகழ்ச்சி மும்பை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மும்பை,
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி இன்று தொடங்கி 14-ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. மூன்று நாள் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தநிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சாரா அலி கான் மற்றும் அவரது சகோதரர் இப்ராகிம் அலி கான், கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஹர்திக் பாண்ட்யா நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் அனில் கபூர், நடிகர்கள் வருண் தவான் மற்றும் கிருத்தி சனோன், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும்நடிகை ஜெனிலியா, நடிகர் சஞ்சய் தத், இசையமைப்பாளர் அனு மாலிக், நடிகை ஷனயா கபூர், நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்ட திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.