< Back
சினிமா செய்திகள்
மாவீரன் திரைப்படம்..! சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி பாராட்டு
சினிமா செய்திகள்

மாவீரன் திரைப்படம்..! சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தினத்தந்தி
|
9 Aug 2023 5:05 PM IST

நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்