< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் `வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் `வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
15 Jan 2024 5:25 AM GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தனது 170-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினியின் 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் ரஜினிகாந்த் நிற்கும் படத்துடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பொங்கல் வாழ்த்துடன் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



மேலும் செய்திகள்