< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகராகும் ராஜமவுலி
|2 July 2023 11:40 AM IST
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற டைரக்டர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் வந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இன்னொரு படமான ஆர்ஆர்ஆர் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. அடுத்து மகாபாரத கதையை பல பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராஜமவுலி தற்போது நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் அவர் நடித்துள்ளார். அடுத்து திரைப்படத்தில் நடிக்கவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சில இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்கும்படி ராஜமவுலியை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.