< Back
சினிமா செய்திகள்
Actor Raghava Lawrence to team up with Telugu director
சினிமா செய்திகள்

ஆர்.எல் 25: தெலுங்கு இயக்குனருடன் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்

தினத்தந்தி
|
14 Sept 2024 8:04 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும்.

அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்', அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.எல் 25 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்குவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்