நடிகர் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்: ரிலீஸ் தேதி எப்போது?
|சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் ஆகும் .
கொச்சி,
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டைரக்டர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்ஞ்மினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கபட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.