மும்பையில் ரூ.30 கோடிக்கு பிரமாண்ட பங்களா வாங்கிய பிருத்விராஜ்
|நடிகர் பிருத்விராஜ் மும்பையில் பங்களா வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபத்தில் இவரது நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான 'ஆடுஜீவிதம்' மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில், அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.
பிருத்விராஜ், நடிகராக மட்டுமில்லாமல், பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.
இந்நிலையில், இவர் மும்பையில் பங்களா வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் ரூ.30.6 கோடி மத்திப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை தனது தயாரிப்பு நிறுவனமான பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் பெயரில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, பிருத்விராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து பாலி ஹில்லில் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.