< Back
சினிமா செய்திகள்
நடிகர் பிரசாந்தின் அந்தகன் பட ரிலீஸ் தேதி மாற்றம்
சினிமா செய்திகள்

நடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி மாற்றம்

தினத்தந்தி
|
31 July 2024 1:40 PM IST

அந்தகன் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த 'அந்தகன்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் 'அந்தகன் ஆந்தெம்' என்ற பாடலை நடிகர் விஜய் சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாகவே படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்