< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்
|25 Aug 2023 3:06 PM IST
கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலத்துடன் அருகில் இருந்த சதுப்புநிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த தடையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.