< Back
சினிமா செய்திகள்
நடிகர் பிரபாசுக்கு அறுவை சிகிச்சை
சினிமா செய்திகள்

நடிகர் பிரபாசுக்கு அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
29 Sept 2023 7:34 AM IST

ஐரோப்பா தனியார் ஆஸ்பத்திரியில் பிரபாசுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலி படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார் பிரபாஸ். பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்தபோது பிரபாசுக்கு முழங்கால் வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் சண்டை காட்சிகளில் நடித்தபோது பிரபாசுக்கு முழங்கால் வலி மீண்டும் தீவிரமானது.

டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைத்தனர். இதையடுத்து 'சலார்' படத்தில் நடித்து முடித்த கையோடு, பிரபாஸ் ஐரோப்பா சென்றார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் பிரபாசுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியா திரும்பும் பிரபாஸ், வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு 'கல்கி' மற்றும் 'மாருதி' படங்களில் நடிக்க இருக்கிறார்.

பிரபாஸ் நடித்த 'சலார்' படம் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்