< Back
சினிமா செய்திகள்
மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா- வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா- வீடியோ வைரல்

தினத்தந்தி
|
30 May 2024 12:08 PM IST

கேங்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி'. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி பின்னர் சிரித்து சமாளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில், பாலகிருஷ்ணா விளையாட்டாக அஞ்சலியை பிடித்து தள்ளியதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா- வீடியோ வைரல்

மேலும் செய்திகள்