விருதுகளை விமர்சித்த நடிகர் பார்த்திபன்
|விருதுகளை விமர்சித்த நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.
பார்த்திபன் இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்து இருந்த ஒத்த செருப்பு படம் கடந்த 2019-ல் வெளியாகி பாராட்டுகளும் விருதுகளும் பெற்ற நிலையில் சமீபத்தில் ஒரு ஒரே ஷாட்டில் உருவான இரவின் நிழல் படத்தையும் சாதனைப் படமாக உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.
ஒத்த செருப்பு படத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்க ரீமேக்கும் செய்துள்ளார். இந்த நிலையில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்துவிட்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதோடு ''தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ''மோடிஜீக்கு ஜே" என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது. பார்த்திபன் பதிவை வரவேற்றும், கண்டித்தும், புரியவில்லை என்று விமர்சித்தும் பலர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.