< Back
சினிமா செய்திகள்
அன்று நீங்கள் நடிகர்தானே என சந்தேகத்துடன் கேட்பார்கள்- நடிகர் பங்கஜ் திரிபாதி

image source : ANI

சினிமா செய்திகள்

அன்று 'நீங்கள் நடிகர்தானே' என சந்தேகத்துடன் கேட்பார்கள்- நடிகர் பங்கஜ் திரிபாதி

தினத்தந்தி
|
22 March 2024 10:06 AM IST

ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று நடிகர் பங்கஜ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி. அவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அன்று 'நீங்கள் நடிகர்தானே' என சந்தேகத்துடன் மக்கள் கேட்பார்கள் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, 'இன்று எல்லோரும் என்னை, நான் நடித்த படங்களின் கதாபாத்திர பெயர்கள் மூலம் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஆரம்பத்தில், ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு, என்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது.

'நீங்கள் நடிகர் தானே' என சந்தேகத்துடன் கேட்பார்கள். மக்கள் என்னுடைய பெயரை அறிந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உண்டு. இன்று அனைவருக்கும் என் பெயர் தெரிந்திருக்கிறது. அவர்கள் நான் நடித்த கதாபாத்திரங்களை மிகவும் நேசிக்கிறார்கள். அதனால் என்னை கதாபாத்திர பெயர்களாலே அவர்கள் அழைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்று உருக்கமுடன் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார்.


மேலும் செய்திகள்