போதை பொருள் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகருக்கு உத்தரவு
|தமிழில் 'அறிந்தும் அறியாமலும்', 'நெஞ்சில்', 'ஏகன்', 'சொல்ல சொல்ல இனிக்கும்', 'இது என்ன மாயம்', 'சீறு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப் போதை பொருள் வழக்கு சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த வழக்கில் 13 பேரை கைது செய்துள்ள போலீசார் அடுத்து நவ்தீப்பையும் குறிவைத்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போதை பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், முன்ஜாமீன் வழங்க கோரியும் நவ்தீப் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் 41 ஏ பிரிவின் கீழ் நவ்தீப்புக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீஸ் விசாரணைக்கு நவ்தீப் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணையின்போது நவ்தீப் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.