< Back
சினிமா செய்திகள்
சரித்திர படத்தில்... சூர்யாவுக்கு வில்லனாக கே.ஜி.எப். பட நடிகர்
சினிமா செய்திகள்

சரித்திர படத்தில்... சூர்யாவுக்கு வில்லனாக 'கே.ஜி.எப்.' பட நடிகர்

தினத்தந்தி
|
24 Jun 2023 10:55 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா 10 தோற்றங்களில் வருகிறார். அதிக பட்ஜெட்டில் எடுக்கின்றனர். நாயகியாக திஷா பதானி நடிக்கிறார்.

கங்குவா படம் முடிவதற்கு முன்பே ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக பேசி வருகின்றனர். திரைக்கதை எந்த படத்தின் சாயலும் இல்லாத வகையில் புதுமையாக இருக்கும் என்கின்றனர். இது சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க பிரபல கன்னட நடிகர் பி.வி.அவினாஷ் தேர்வாகி உள்ளார். இவர் கன்னட மொழியில் தயாராகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூல் குவித்த கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பி.எஸ்.அவினாஷ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கங்குவா படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் நான் எப்படி நடிக்க போகிறேன் என்பதை நினைத்து பயமாக இருக்கிறது. விரைவில் திரையில் சந்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார். அவினாசுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்