மனைவியை பழிவாங்க ரூ.15 கோடியில் சினிமா படம் எடுத்த நடிகர் நரேஷ்...!
|நரேஷ், பவித்ராவின் காதல் கதைதான் சினிமா படமாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதுதான் மல்லி பெல்லி.மனைவியை பழிவாங்கவே அவர் படம் எடுப்பதாக தெலுங்கு சினிமா உலகில் பேசப்படுகிறது.
ஐதராபாத்
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மல்லி பெல்லி'. பிரபல தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் மே 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் டீசரைப் பார்த்தால், இது நரேஷின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.
சமீபத்தில் டிரைலரை வெளியிட்ட தயாரிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பில் நரேஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்தார்.
உங்கள் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு. 'அது படம் பார்த்தால் தெரியும். இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும் அதனால்தான் கதையை வெளியிட முடியவில்லை. படம் பார்த்த பிறகு எல்லா விஷயங்களும் புரியும். இது ஒரு தனித்துவமான படம்' என கூறினார்.
இந்தப் படத்தின் மூலம் உங்கள் மூன்றாவது மனைவியைப் பழிவாங்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தார் நரேஷ்.
'பழிவாங்குதல் என்றால் வாளால் குத்துவது. போலீசில் புகார் அளிப்பது , நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், ஆனால் படத்தின் மூலம் என்ன பழிவாங்க போகிறேன்..!
சினிமா என்பது பொழுதுபோக்கு. ரூ. 15 கோடி செலவு செய்து பழிவாங்க முயற்சிக்க முடியாது' என நரேஷ் கூறினார். நரேஷின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் எலந்த பழம் பாடல் மூலம் பிரபலமான மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் மகனும் மூத்த தெலுங்கு நடிகருமான நரேஷ் கன்னட நடிகை பவித்ரா லோகேஷை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. திருமண புகைப்படமும் வைரலானது. இந்த திருமணம் ஒரு படத்தில் இடம்பெறும் காட்சி என்றும் பேசினர்.
நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். இவருக்கு 63 வயது ஆகிறது. பவித்ரா லோகேசும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு 44 வயது. நரேசுக்கு ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன என்றும் அதை அபகரிக்கும் திட்டத்தோடு அவரை பவித்ரா மணந்துள்ளார் என்றும் பவித்ராவின் முதல் கணவர் குற்றம் சாட்டினார்.
மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் நரேசும் பவித்ராவும் தங்கி இருந்தபோது நரேசின் 3-வது மனைவி ரம்யா ஓட்டலுக்கு சென்று இருவரிடம் சண்டை போட்டார். பவித்ராவை செருப்பால் அடிக்கவும் பாய்ந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை என்னிடம் இருந்து பவித்ரா பிரித்து விட்டார் என்றும் ரம்யா குற்றம் சாட்டி இருந்தார்.
நரேஷ், பவித்ராவின் காதல் கதைதான் சினிமா படமாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதுதான் மல்லி பெல்லி.மனைவியை பழிவாங்கவே அவர் படம் எடுப்பதாக தெலுங்கு சினிமா உலகில் பேசப்படுகிறது.