< Back
சினிமா செய்திகள்
மெய்யழகன் படத்தை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா
சினிமா செய்திகள்

'மெய்யழகன்' படத்தை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா

தினத்தந்தி
|
30 Sept 2024 3:30 PM IST

‘மெய்யழகன்’ படமானது என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது என்று நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சொந்த ஊர், உறவு ஆகியவற்றைப் பிரிந்து சென்று, சிறிது காலம் வாழ்ந்துவிட்டு மீண்டும் வீடு திரும்புகிற ஒருவரின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தெலுங்கில் 'சத்யம்சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் 'மெய்யழகன்' படத்தை பாராட்டி நடிகர் நாகார்ஜூனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், "நேற்று, என் அன்புச் சகோதரர் கார்த்தி நடித்த 'சத்யம்சுந்தரம்' திரைப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை என் முகத்தில் ஒரு இனிய புன்னகை தவழ்ந்தது. அதே மகிழ்ச்சியான உணர்வுடன் உறங்கச் சென்றேன். இப்படம் என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்ததோடு, நாங்கள் இருவரும் இணைந்து நடித்த 'தோழா' திரைப்படத்தின் அனுபவங்களையும் நினைவுபடுத்தியது" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்