< Back
சினிமா செய்திகள்
இளையராஜாவை சந்தித்த நடிகர் நாக சைதன்யா.. ..நெகிழ்ச்சி பதிவு
சினிமா செய்திகள்

இளையராஜாவை சந்தித்த நடிகர் நாக சைதன்யா.. ..நெகிழ்ச்சி பதிவு

தினத்தந்தி
|
25 Feb 2023 10:11 PM IST

இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் நாகசைதன்யா. சந்தித்துள்ளார்

இயக்குநர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார்.இப்படத்திற்கு 'கஸ்டடி' என பெயரிடப்பட்டுள்ளது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, . இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் நாகசைதன்யா. சந்தித்துள்ளார் .இந்த சந்திப்பு குறித்து நாக சைதன்யா தனது டுவிட்டர் பக்கத்தில், 'மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடை இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது. அதிகம் முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன்.

தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்