< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
விவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்

25 Oct 2023 3:54 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ‘அரிசி' என்ற படம் மூலம் நடிகராகி உள்ளார்.
இந்த படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பி.சண்முகம் தயாரிக்க எஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.
படக்குழுவினர் கூறும்போது, "அரிசி படம் முழுக்க விவசாய பின்னணியில் உருவாகிறது. அரிசி வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. மனித வாழ்வியலின் உயிர்நாடி என்பதை இந்த தலைமுறைக்குக்கு எடுத்து சொல்வதே இந்த படம்.
இதில் விவசாயியாக நடிக்கும் முத்தரசன் பேசும் வசனங்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். விவசாயிகள் பலர் இதில் நடித்துள்ளனர்'' என்றனர்.