மலையாள தயாரிப்பாளரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் 4 மணி நேரம் விசாரணை
|மலையாள தயாரிப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
மலையாள திரையுலகின் முன்னனி நடிகர் மோகன்லாலும், மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் இணைந்து பட தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆண்டனி பெரும்பாவூருக்கு சொந்தமான இடங்களில் கடந்த டிசம்பர் 15-ந்தேதி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆண்டனி மற்றும் மோகன்லால் இணைந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து, நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதையடுத்து கொச்சியில் உள்ள தனது வீட்டில், சுமார் 4 மணி நேரமாக நடிகர் மோகன்லால் விளக்கம் அளித்தார். தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலிடம் கார் ஓட்டுநராக இருந்து திரைப்பட தயாரிப்பாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.