< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி
|21 Feb 2024 5:07 PM IST
கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ம் தேதி காலமானார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து நடிகர் மோகன், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.