அரைகுறை ஆடை பெண்ணுக்கு ரிப்ளை...! சர்ச்சையில் நடிகர் மாரிமுத்து - மகன் விளக்கம்
|சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து.
பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு இயக்குனராக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததன் காரணமாக தற்போது முழுநேர நடிகராக களமிறங்கி உள்ளார் மாரிமுத்து. ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலிலும் மாஸ் காட்டி வருகிறார்.
குறிப்பாக திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இவரது கேரக்டர் வேறலெவலில் ஹிட் அடித்து உள்ளது. இப்படி பாப்புலரான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மாரிமுத்து தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். அதன்படி டுவிட்டரில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I call you" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரிப்ளையில் yes என பதிலளித்து தன்னுடைய மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஷாக்கிங் விஷயம் என்னவென்றால் அது உண்மையிலேயே நடிகர் மாரிமுத்துவின் மொபைல் நம்பர் தான். அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் தான் இந்த டுவிட் வைரல் ஆனது.
இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்
அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டு உள்ளது.