51 வயதில் தந்தை ஆகும் மகிழ்ச்சியில் நடிகர் மனோஜ் திவாரி
|நடிகர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மனோஜ் திவாரி தனது 51 வயதில் தந்தை ஆகும் மகிழ்ச்சியில் உள்ளார்.
புதுடெல்லி,
போஜ்புரி திரையுலகின் நடிகர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் மனோஜ் திவாரி (வயது 51). இவரது மனைவி சுரபி திவாரி. இந்த தம்பதிக்கு 2-வது குழந்தை பிறக்க உள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் மனோஜ் திவாரி.
இந்த மகிழ்ச்சியான செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதனை உணர மட்டுமே முடியும் என்று வீடியோவை வெளியிட்டு தெரிவித்து உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 2020-ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. டிசம்பரில் இந்த தம்பதிக்கு மகள் பிறந்து உள்ளார். இவர்களுக்கு சான்விகா என்ற மகள் உள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு மனோஜ் திவாரி, ராணி திவாரி என்பவரை திருமணம் செய்ததில், ரீத்தி திவாரி என்ற மகள் உள்ளார். இதன்பின்னர், 2012-ம் ஆண்டு அந்த தம்பதி பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.