டைரக்டரான மனோஜ் நெகிழ்ச்சி...!
|நடிகர் மனோஜ் ‘மார்கழி திங்கள்' படம் மூலம் டைக்டராகி உள்ளார்
தமிழில் தாஜ் மகால் படம் மூலம் கதாநாயகனான மனோஜ் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'மார்கழி திங்கள்' படம் மூலம் டைக்டராகி உள்ளார். இவர் டைரக்டர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.
மார்கழி திங்கள் படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதில் பாரதிராஜாவும் நடித்து இருக்கிறார். நாயகனாக ஷியாம் செல்வன், நாயகியாக ரக்ஷனா ஆகியோரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்து உள்ளார்.
பட நிகழ்ச்சியில் டைரக்டரானது குறித்து மனோஜ் நெகிழ்ச்சியோடு பேசும்போது, "18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குனராக வந்திருக்கிறேன். இயக்குனராக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசையால் நடிக்க வந்தேன்.
சுசீந்திரனிடம் நிறைய கதைகள் சொல்லி இருந்தேன். திடீரென்று ஒருநாள் அழைத்து படம் இயக்க சொல்லி விட்டார். 15 நாட்களிலேயே படப்பிடிப்பு தொடங்கியது. எனது முதல் படத்திலேயே இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைந்து இருப்பது பெருமை. நாயகன், நாயகி உள்ளிட்ட அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இது வெற்றிப்படமாக அமையும்'' என்றார்.