< Back
சினிமா செய்திகள்
வெண்ணிலா கபடி குழு படத்தில் பிரபலமான நடிகர் மாயி சுந்தர் மரணம்
சினிமா செய்திகள்

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் பிரபலமான நடிகர் 'மாயி' சுந்தர் மரணம்

தினத்தந்தி
|
25 Dec 2022 1:18 PM IST

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ‘மாயி' சுந்தர் உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் 'மாயி' சுந்தர். இவர் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து பிரபலமானார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். விரைவில் திரைக்கு வர உள்ள 'உயிர் தமிழுக்கு' படத்திலும் அமீருடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாயி சுந்தருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசமாகி நேற்று அதிகாலை 'மாயி' சுந்தர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50. மாயி சுந்தர் உடல் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. மாயி சுந்தர் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்