< Back
சினிமா செய்திகள்
நடிகர் லாலுக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது
சினிமா செய்திகள்

நடிகர் லாலுக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

தினத்தந்தி
|
14 May 2023 5:46 PM IST

நடிகர் லாலுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

ஏற்கனவே நடிகர் கமல் நடிகர் பார்த்திபன், நடிகர் விக்ரம், நடிகை திரிஷா, இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் நடிகைகள் ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின், அமலாபால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் லாலுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இவர் தமிழில் எங்கள் அண்ணா, சண்டக்கோழி, தீபாவளி, கர்ணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் லால் நடித்துள்ளார்.



மேலும் செய்திகள்