'மாஸ்க்' திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
|நடிகர் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஸ்டார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு 'மாஸ்க்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் மே மாதம் 17-ம் தேதி தொடங்கியது.இப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விக்ரணன் அசோக் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன், கவின் மற்றும் படக்குழுவினர் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தனர்.