< Back
சினிமா செய்திகள்
விக்ரம் திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி டுவீட்..!
சினிமா செய்திகள்

'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி டுவீட்..!

தினத்தந்தி
|
6 Jun 2022 7:50 PM IST

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த 3-ந்தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கார்த்தி 'விக்ரம்' படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ''விக்ரம் திரைப்படம் அனைவரும் குறிப்பிட்டது போல் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்‌சனும் காட்சியமைப்பும் சுவாரசியமான தொடர்புகள் கொண்டதாகவும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. பகத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிடவில்லை.

விஜய் சேதுபதி, வில்லன் கதாபாத்திரத்தின் புதிய பக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளை இன்னும் பெரியதாகவும், காப்பவர்களை சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றியிருக்கிறார்.

இறுதியாக... ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் நீங்கள் உங்களின் ரசிகர் மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டீர்கள்'' என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்