< Back
சினிமா செய்திகள்
சர்தார் படத்துக்கு வரவேற்பு - நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி ட்வீட்
சினிமா செய்திகள்

'சர்தார்' படத்துக்கு வரவேற்பு - நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி ட்வீட்

தினத்தந்தி
|
22 Oct 2022 9:16 PM IST

‘சர்தார்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது 'சர்தார்' திரைப்படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதில் நடிகர் கார்த்தி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தந்தை-மகனாக இரு வேடங்களில் நடித்துள்ளார். இது தவிர நடிகைகள் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், முனீஷ்காந்த், குழந்தை நட்சத்திரம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்கள் அனைவரின் அன்புக்கும், சர்தாரை சூப்பர் ஹிட் ஆக்கியதற்கும் நன்றி. உங்களின் அமோகமான பாராட்டு மற்றும் வரவேற்பு எங்கள் ஒட்டுமொத்த குழுவையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


Makkale THANK YOU for all the love and making #Sardar a super hit

Our entire team is touched by your overwhelming appreciation and response #SardarDeepavali @Psmithran @Prince_Pictures @gvprakash @RaashiiKhanna @rajishavijayan @RedGiantMovies_ @AnnapurnaStdios

— Karthi (@Karthi_Offl) October 21, 2022 ">Also Read:

மேலும் செய்திகள்