< Back
சினிமா செய்திகள்
கங்குவா பட டிரெய்லரில் நடிகர் கார்த்தியா?
சினிமா செய்திகள்

'கங்குவா' பட டிரெய்லரில் நடிகர் கார்த்தியா?

தினத்தந்தி
|
13 Aug 2024 5:12 AM GMT

இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் டிரெய்லரை நேற்று வெளியிட்டனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

இதற்கிடையில், 'கங்குவா' படத்தின் 2-ம் பாகத்தில் வில்லான நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, வெளியாகி உள்ள டிரெய்லரின் இறுதியில் குதிரையில் வரும் ஒருவரை பார்த்து சூர்யா சிரிக்கிறார். ஆனால் அந்த நபரின் முகத்தை டிரெய்லரில் படக்குழுவினர் காட்டவில்லை. அது நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும், என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகர் கார்த்தி படத்தின் டிரெய்லர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'என்னவொரு டிரெய்லர், இந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை, பெருமையாக இருக்கிறது' என்று நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்