மாடல் அழகியுடன் காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்
|காதலர் தினத்தையொட்டி தாரணி காளிங்கராயருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை காதலிப்பதை காளிதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.தமிழிலும் காளிதாஸ் 2016-ம் ஆண்டு வெளியான மீன் குழம்பும் மண் பானையும் என்ற படம் மூலம் அறிமுகமானார். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற விக்ரம் படத்திலும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நாயகனாக நடித்து இருந்தார். பாவக்கதைகள் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் தாரணி காளிங்கராயர் என்ற மாடல் அழகியுடன் நெருங்கி பழகுவதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி தாரணி காளிங்கராயருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை காதலிப்பதை காளிதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.