பெண்களை துன்புறுத்தாத நடிகர் ஜான் ஆபிரகாம் - நடிகை கங்கனா ரணாவத்
|நடிகர் ஜான் ஆபிரகாம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்
தமிழில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். கங்கனா இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருப்பதாக தொடர்ந்து சாடி வருகிறார். இந்தி கதாநாயகர்களை கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்.
இந்த நிலையில் ஜான் ஆபிரகாம் தன்னை கவர்ந்த நடிகர் என்று பாராட்டி உள்ளார். இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "சினிமா துறையில் மோசமான நடிகர்கள் குறித்து பேசி இருக்கிறேன். இவர்களில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு நல்ல நடிகர் ஜான் ஆபிரகாம்.
ஜான் ஆபிரகாமுடன் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் எந்த அளவுக்கு நல்லவர் என்று சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. ஜான் ஆபிரகாம் தன்னை புகழ்ந்து பேச யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்.
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனாலும் எந்த பெண்ணுடனும் தொடர்பில் இல்லை. மற்றவர்கள் பற்றி தவறாக பேசமாட்டார். பெண்களை துன்புறுத்த மாட்டார். ஜான் ஆபிரகாம் ஒரு அற்புதமான மனிதர். அவர் சொந்த முயற்சியில்தான் முன்னேறினார். எல்லா விதத்திலும் வெற்றி பெற்ற மனிதர்'' என்றார்.