தயாரிப்பாளரான நடிகர் ஜீவா
|கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது நடிகர் ஜீவாவும் இணைந்துள்ளார்.
சூப்பர்குட் ஸ்டூடியோ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்குகிறார். இவரது தந்தை ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா தயாரிக்கும் முதல் படத்தை ராஜேஷ் டைரக்டு செய்ய உள்ளார். இதில் ஜீவாவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 2009-ல் வெளியான சிவா மனசுல சக்தி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை போலவே காமெடி கதையம்சத்தில் புதிய படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஜீவா படப்பிடிப்பு தொடங்க உள்ளது.