< Back
சினிமா செய்திகள்
கண் தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட நடிகர் ஜெயராம்
சினிமா செய்திகள்

கண் தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட நடிகர் ஜெயராம்

தினத்தந்தி
|
10 Sept 2023 10:30 PM IST

கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் நடிகர் ஜெயராம் கையெழுத்திட்டார்.

சென்னை,

சென்னை பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் பங்கேற்றார். தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம், கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.



மேலும் செய்திகள்