< Back
சினிமா செய்திகள்
நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள்;  சைரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
சினிமா செய்திகள்

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள்; 'சைரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

தினத்தந்தி
|
10 Sept 2023 1:55 PM IST

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சைரன் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் ஜெயம் ரவியின் பிறந்த நாளான இன்று 'சைரன்' படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்