< Back
சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி?
சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி?

தினத்தந்தி
|
11 Sept 2024 5:00 PM IST

கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 44' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்பொழுது 'பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாகவுள்ளது.

பிரதர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து 'காதலிக்க நேரமில்லை' மற்றும் 'ஜீனி' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 44' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கூறியுள்ளார். அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் 'சூர்யா 44' படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்