திருமணக் கோலத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்
|நடிகை பிரக்யா நாக்ராவை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை நடிகர் ஜெய் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
நாற்பது வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் பேச்சுலர் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். 'எப்போது திருமணம்?' என்ற கேள்வி வந்தாலே சிரித்து மழுப்புபவர் இப்போது நடிகை பிரக்யா நாக்ராவுடன் திருமணம் முடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த பிரக்யா நாக்ரா 'வரலாறு முக்கியம்', 'என்4' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கழுத்தில் புது தாலி அணிந்திருக்கும் பிரக்யா, அருகில் கையில் பாஸ்போர்ட்டுடன் ஜெய்யும் இருக்க 'கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்கி இருக்கிறது!' என புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். .
ஜெய்யும் இந்தப் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இருவருக்கும் திடீர் திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். இது நிஜத்தில் நடந்த திருமணமா அல்லது பட புரமோஷனா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பு நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஜெய். பின்பு, இருவரும் நண்பர்கள் தான் என அஞ்சலி விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பேபி அண்ட் பேபி எனும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தற்போது நடிகர் ஜெய் வெளியிட்டுள்ளார் என்றும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.