< Back
சினிமா செய்திகள்
மெட்ரோ ரெயிலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகம்
சினிமா செய்திகள்

மெட்ரோ ரெயிலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
15 Oct 2023 1:49 PM IST

நடிகர் ஹிருத்திக் ரோஷன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை மெட்ரோ ரெயிலில் சென்றபோது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

மும்பை,

நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், மெட்ரோ ரெயில் பயண அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் படப்பிடிப்புக்காக மும்பை மெட்ரோவில் சென்றுள்ளார். காரில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் திணற வேண்டும். அதனால், மெட்ரோவில் பயணிக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

அவர், மும்பை மெட்ரோ ரெயிலில் ஏறி சக பயணிகளுடன் ஒன்றாக அமர்ந்து சென்றார். இந்த பயணத்தின்போது, அவர் பல்வேறு வயது கொண்ட ரசிக, ரசிகைகளுடன் ஒன்றாக நின்று செல்பி புகைப்படங்களையும் எடுத்து கொண்டார்.

இதற்கு ஹிருத்திக் ரோஷனின் காதலியான சபா ஆசாத், நடிகர் அனில் கபூர், யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி மற்றும் ரசிகர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.

அந்த நாளில் மெட்ரோவில் பயணம் செய்யாமல் போய் விட்டேன் என ஒருவரும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என மற்றொருவரும், மெட்ரோவை இனி நான் பயன்படுத்த வேண்டும் என இன்னொருவரும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்