< Back
சினிமா செய்திகள்
நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்
சினிமா செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்

தினத்தந்தி
|
29 Oct 2022 9:56 AM IST

ஹரிஷ் கல்யாண்-நர்மதா உதயகுமார் திருமணம் திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். சட்டப்படி குற்றம், பொறியாளன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வந்த பியார் பிரேமா காதல் பெரிய வெற்றி பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தற்போது நூறுகோடி வானவில், ஸ்டார், டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானவது. ஹரிஷ் கல்யாண்-நர்மதா உதயகுமார் திருமணம் நேற்று காலை திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது, திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர்-நடிகைகளும் மணமக்களுக்கு வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்