நடிகர் தனுஷின் 'வாத்தி' படத்தின் டிரைலர் வெளியீடு
|, 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது..
சென்னை,
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.. இந்த டிரைலர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Here you go, the much-anticipated #Vaathi trailer is here!
— Seven Screen Studio (@7screenstudio) February 8, 2023
▶️ https://t.co/r3hP1jdvEC @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #VaathiTrailer #VaathiOn17Feb