< Back
சினிமா செய்திகள்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு
சினிமா செய்திகள்

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு

தினத்தந்தி
|
9 Nov 2023 10:02 PM IST

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார் .

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்."'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 'மாமதுர' பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார் .

எக்ஸ் தளத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் ,

"ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் பார்த்தேன். இது கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. ராகவா லாரன்ஸின் சிறந்த நடிப்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் பிரமிப்பான நடிப்பை பார்ப்பது தொடர்கதையாகிவிட்டது. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. கடைசி 40 நிமிடம் உங்கள் இதயத்தை கொள்ளைக்கொள்ளும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்