< Back
சினிமா செய்திகள்
மீண்டும் கேப்டன் மில்லர் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்
சினிமா செய்திகள்

மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்

தினத்தந்தி
|
20 Aug 2023 4:31 PM IST

நடிகர் தனுஷ் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இதனிடையே தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்