< Back
சினிமா செய்திகள்
நடிகர் தனுஷின் படப்பிடிப்பு அனுமதி ரத்து
சினிமா செய்திகள்

நடிகர் தனுஷின் படப்பிடிப்பு அனுமதி ரத்து

தினத்தந்தி
|
30 Jan 2024 7:58 PM IST

படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை திருப்பதி மாநகர காவல்துறையினர் ரத்து செய்தனர்.

சென்னை,

நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷின் படப்பிடிப்பு ஒன்று திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

படப்பிடிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது

இந்த நிலையில் படப்பிடிப்பை நிறுத்த கோரி காவல் நிலையத்தில் பாஜக மனு அளிக்க்கப்பட்டது. புகாரை தொடர்ந்து படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை திருப்பதி மாநகர காவல்துறையினர் ரத்து செய்தனர்.

மேலும் செய்திகள்