நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சமரச பேச்சுவார்த்தை
|நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.