< Back
சினிமா செய்திகள்
நடிகர் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
சினிமா செய்திகள்

நடிகர் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தினத்தந்தி
|
30 March 2024 9:54 PM IST

சென்னை ஓட்டேரியில் உள்ள இடுகாட்டில் நடிகர் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

சென்னை,

கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவரது உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள இடுகாட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்